129
கார்த்திகை மாதம் 25ஆம் நாள். 11 டிசம்பர், 2023. திங்கட்கிழமையான இன்று மதியம் 12:13 வரை ரேவதி, அதன்பின் அசுவினி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை மேற்கொள்ள உகந்த நாள் இதுவல்ல. மனதில் குழப்பங்கள் வந்துபோகும். அனைவரிடமும் பொறுமையுடன் இருக்க வேண்டும்
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, உடன் பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, எதிர்பாராத வகையில் நண்பர்களால் காரியங்கள் அனுகூலமாகும். சில செலவுகள் வந்துபோகும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதால் கெடுதல் விளையாது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
சிம்ம ராசி நேயர்களே, உடல் நலனில் அக்கறை வேண்டும். உறவினர்களிடத்தில் சில சச்சரவுகள் வரலாம். பேசும்போது அனைவரிடமும் யோசித்து பேசுங்கள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, இன்று முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தன்னம்பிக்கையுடன் வலம் வரும் நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். ஆதலால் எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, உறவினர்கள் வாயிலாக நல்ல செய்திகள் வரலாம். எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து போவது நல்லது.
மகரம்:
மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
கும்ப ராசி நேயர்களே, சிக்கலான விடயங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க நேரும். பொறுமையுடன் கவனமும் தேவைப்படும் நாள். பணவரவும், செலவும் ஒருசேர அமையும் நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, கடினமான உழைப்பை கோரும் நாள். வீண் அலைச்சலால் சோர்வு உண்டாகும். தொழில் வழக்கம் போலவே இருக்கும். வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார்கள்.