84
கார்த்திகை மாதம் சனிக்கிழமையான இன்று இரவு வரை பூசம், அதன்பின் ஆயில்யம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, சுறுசுறுப்பான நாள் இன்று. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். பிள்ளைகளால் சிறுசிறு செலவுகள் வரக்கூடும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, நினைத்தது நடக்கும் நாள். தொழிலில் லாபம் கிடைக்கும். உறவுகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, வியாபாரத்தில் சிக்கல் இல்லை. பெரியவர்கள் அறிவுரைக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, உறவுகள் பிரச்சினையில் இழுத்து விடலாம். வாழ்க்கைத்துணையிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். பேசும் வார்த்தைகளை கவனத்துடன் தேர்வு செய்து பேசவேண்டும். குடும்பத்தினர் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, கடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வழியில் நல்ல காரியங்கள் கைகூடும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் அன்பும், ஆதரவும், அறிவுரைகளும் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, பிள்ளைகளிடத்தில் சங்கடங்கள் உண்டாகலாம். பொறுப்புகள் அலைச்சலை கொடுக்கும். புதிய முயற்சிகளுக்கு உகந்த நாளாக இது இல்லை.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். உறவுகள் செலவினை இழுத்து விடலாம். பேச்சில் கவனம் தேவை.
மகரம்:
மகர ராசி நேயர்களே, உடன் பிறந்தவர்களால் செலவுகள் வரும். பேசும் பேச்சில் கவனமும் பொறுமையும் தேவை.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தினர் உடல் நலனில் அக்கறை வேண்டும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, வீண் பேச்சு விபரீதத்தில் முடியும். பொறுப்புகள் அதிகம் ஆதலால் சோர்வும் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.