140
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லியை, சின்னத்திரை நடிகையான சங்கீதா இன்று கரம் பிடித்தார்.
கிங்ஸ்லி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகராவார்.
90களில் சில படங்களில் பணியாற்றிய இவர் அதன்பின்னர் பெங்களூரில் வேலை செய்து வந்தார்.
கோலமாவு கோகிலா மடத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்த இவர் டாக்டர், எல்கேஜி, அண்ணாத்த, ஜெயிலர், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல் நடிகை சங்கீதா ஆனந்த ராகம், அரண்மனைக்கிளி, திருமகள் ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவராவார்.
சின்னத்திரை நடிகையான இவர் பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர், வீட்ல விஷயமஆ கிய படங்களிலும் நடித்துள்ளார்.
46 வயதான கிங்ஸ்லிக்கும் சங்கீதாவிற்கும் இன்று திருமணம் நடந்தது.
அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.