73
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் கடந்த மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விவாதிக்கப்படவுள்ளது.
இவ்வாறானநிலையில் இந்த முறை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமையும் கூடியுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பின் படி திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டும்.
ஞாயிற்றுகிழமைகளில் பொதுவாக நாடாளுமன்றம் கூடுவது மிகவும் அறிது.
ஆனால் இந்த முறை வரவு செலவு திட்ட விவாதத்தின் போது நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மீதான அதாவது வெட் வரி மீதான விவாதத்துக்கு சபை அமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அங்கிகாரம் கடந்த செவ்வாய்க்கிழமை (05) நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டது.
இலங்கை அரசியலமைப்பில் நிலையியற் கட்டளையின் பிரகாரம்இ ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படுவதில்லை.
அவ்வாறு ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற அமர்வு முன்னெடுக்கப்படுமேயானால் நிலையான உத்தரவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் .
எனவே வெட் வரி மீதான விவாதத்துக்காகஇ சபையின் கூட்டத்துக்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.
நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான பிரேரணை அவைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நாடாளுமன்றில் கடந்த 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் கோரமின்மை காரணமாக இன்று காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதாவது கோரமின்மை என கூறப்படுவது நாடாளுமன்ற விவாதத்தை முன்னெடுக்க போதிய உறுப்பினர்கள் சபை அமர்வில் இல்லை என்பது பொருள்படும். நேற்றைய நாடாளுமன்ற அமர்விலும் இவ்வாறான ஒரு நிலையே காணப்பட்டது.
எனவே நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (12) காலை 09.30 வரை ஒத்திவைக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.