குரோதி வருடம் ஆடி மாதம் 8 ஆம் தேதி புதன் கிழமை 24.07.2024 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்கள் கிடைத்து எதிர்பாராத லாபம் பெறுவீர்கள்.
நண்பர்களுக்கு உதவி செய்து நன்மதிப்பை அடைவீர்கள்.
சிக்கலான விஷயங்களை பெண்கள் மூலமாக தீர்த்து வைப்பீர்கள்.
ரிஷபம்
கணிசமான லாபத்தை ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் அடைவீர்கள்.
நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனை காண்பீர்கள்.
நண்பர்கள் மூலமாக புதிய தொழில் தொடங்குவீர்கள்.
மிதுனம்
என்றோ செய்த நல்ல காரியத்திற்கான பலனை இன்று அறுவடை செய்வீர்கள்.
குடும்பத்திற்குள் இருந்த குழப்பத்தை நீக்கி குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள்.
குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.
கடகம்
வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசாதீர்கள்.
வளைவுகளில் திரும்புகின்ற பொழுது மிகவும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் விபத்து ஏற்பட்டு காயம் அடைவீர்கள்.
புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.
சிம்மம்
காதலி உங்கள் கருத்துக்கு எதிராக நடப்பதால் கவலைப்படுவீர்கள்.
புதிய வாகனம் வாங்கி பெருமைப்படுவீர்கள்.
வியாபாரிகள் பொருளாதார முன்னேற்றம் பெறுவீர்கள்.
கட்டிடத் தொழிலில் எலக்ட்ரீசியன்கள் தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள்.
கன்னி
நீண்ட தூரப் பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மறக்காதீர்கள்.
ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள்.
வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சந்திப்பீர்கள்.
துலாம்
மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பீர்கள்.
தொழிலுக்கான பணத்தைப் புரட்ட சிரமப்படுவீர்கள்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்காமல் தடுமாறுவீர்கள்.
விருச்சிகம்
கூட்டாகச் செய்யும் தொழிலில் கொள்ளை லாபம் பெறுவீர்கள்.
போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள்.
நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல பலனை அடைவீர்கள்.
தனுசு
நண்பரின் பிரச்சினையைத் தீர்க்க காவல் நிலையம் செல்வீர்கள்.
வியாபாரத்தைப் பெருக்க இரவு பகலாக உழைப்பீர்கள்.
தொழிலாளர் பற்றாக்குறையால் வேலையில் சுணக்கம் காண்பீர்கள்.
மகரம்
வாக்குத் திறமையைக் காட்டி வேலைவாய்ப்பைப் பெறுவீர்கள்.
மருத்துவர்கள்இ பொறியியலாளர்கள் சாதனை படைப்பீர்கள்.
பொருளாதாரச் சரிவால் உறவினர்கள் மத்தியில் மரியாதை குறைவை சந்திப்பீர்கள்.
கும்பம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிப்பீர்கள்.
அதையும் தாண்டி அவமானங்களையும் சந்திப்பீர்கள்.
வேலை விஷயமாக அலைச்சலால் பாதிக்கப்படுவீர்கள்.
மீனம்
ஞாபக மறதியால் நல்ல வாய்ப்பை கோட்டை விடுவீர்கள்.
அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)