279
துபாயில் மெக்லாரனின் சூப்பர் கார் பொலிஸாரின் ரோந்து படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஹைபிரிட் சூப்பர் கார் மெக்லாரன் அர்டுரா (McLaren Artura).
இது மணிக்கு 330 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் மேம்படுத்தப்பட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக இந்த காரானது 3.0 வினாடி Acceleration நேரத்தைக் கொண்டது.
இந்த நிலையில் துபாய் காவல்துறை மற்றும் மெக்லாரன் இடையேயான கூட்டன்மையின் படி McLaren Artura சூப்பர் கார் துபாய் கார் ரோந்து படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துபாய் காவல்துறை ஜெனரல் கூறுகையில், ” பொது பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் துபாயின் காவல்துறை அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் வாகனங்களில், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் விதிவிலக்கான செயல்திறனுக்கு இது சிறந்த உதாரணம் ஆகும்” என தெரிவித்தார்.