குரோதி வருடம் ஆடி மாதம் 2 ஆம் தேதி வியாழக்கிழமை 18.07.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறால் அவதிப்படுவீர்கள்.
அஷ்டம சந்திரன் உங்களுக்கு கஷ்டத்தைக் கொடுப்பதில் ஆச்சரியமில்லை.
புதிய முயற்சிகளைத் தள்ளிப் போட்டால் நஷ்டம் அடைய மாட்டீர்கள்.
ரிஷபம்
வியாபாரத்திற்கு உதவியான வெளிநாட்டு செய்தியால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவீர்கள்.
தொழிலில் உருவாகும் போட்டிகளைச் சுலபமாக முறியடிப்பீர்கள்.
மிதுனம்
விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
ஆடல் பாடல் என்று இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.
தொழிலில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் புத்திசாலித்தனமாக அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள்.
கடகம்
நெருஞ்சி முள்ளைப் போல ஒரு கவலை நெஞ்சில் உறுத்தும்.
மனைவி மக்களின் ஆதரவால் மன நிம்மதி பெறுவீர்கள்.
தேவைக்காக அதிக விலை கொடுத்து பொருள்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்
முயற்சி செய்யாமலேயே முன்னேற்றப் பாதைகளின் கதவுகளை திறப்பீர்கள்.
விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி மகிழ்ச்சி அடைவீர்கள்.
மேலதிகாரிகளின் அன்பை எண்ணி ஆச்சரியப்படுவீர்கள்.
கன்னி
ஆடை ஆபரணங்கள் வாங்கி மனைவி மக்களை அசத்துவீர்கள்.
புதிய பொருட்களால் வீட்டை அலங்கரிப்பீர்கள்.
கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் பெறுவீர்கள்.
விருந்து நிகழ்ச்சிகளால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள்.
துலாம்
செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள்.
அனைவரும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள்.
நண்பரின் குடும்பப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பீர்கள்.
விருச்சிகம்
வளர்பிறை சந்திரனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
கடின உழைப்புக்குப் பிறகு வெற்றி பெறுவீர்கள்.
பணியிடத்தில் தேவையில்லாத டென்ஷன் அடைவீர்கள்.
தனுசு
மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தவறாதீர்கள்.
பயணங்களின்போது எச்சரிக்கையாக இருங்கள்.
சிறு விபத்துக்களைச் சந்திப்பீர்கள்.
மகரம்
நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்ற அடி போடுவீர்கள்.
குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.
கோயில் தரிசனங்களுக்காக குடும்பத்துடன் செல்வீர்கள்.
கும்பம்
கண்ணை மூடிக்கொண்டு காரியம் செய்தாலும் விண்ணைத் தொடும் வெற்றி பெறுவீர்கள்.
கையில் காசு பணம் தாராளமாகப் புழங்கும்.
சாதுரியமான செயலால் தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள்.
மீனம்
எதிலும் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட்டால் பண இழப்பை சந்திக்க மாட்டீர்கள்.
கெட்டபெயர் வாங்காமல் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொள்ளுங்கள்.
வேலை காரணமாக அலைபவர்கள் வேளை வேளைக்கு சாப்பிட தவறாதீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)