329
உகாண்டா கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தவிருக்கும் டி20 உலகக்கோப்பை அடுத்த வருடம் ஆரம்பமாக உள்ளது.
இந்த தொடரில் மொத்தமாக 20 அணிகள் விளையாடவுள்ளன.
தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளை தவிர்த்து மீதம் உள்ள 12 அணிகளை தேர்வு செய்ய தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
உகாண்டா அணி டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதன்மூலம் முதல் முறையாக உகாண்டா அணி சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
அதே சமயம் ஜிம்பாப்வே அணி தகுதி பெற தவறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இறுதியாக 2024இல் நடக்க போகும் டி20 உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய 20 நாடுகளின் அணிகள் பங்கேற்கவிருக்கின்றன.
1 comment
[…] அணுகியதாக குறிப்பிட்டார். 2023 உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் […]