குரோதி வருடம் ஆடி மாதம் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.07.2024 சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை தடங்கல் இன்றி நிறைவேற்றுவீர்கள்.
பொருளாதாரத்திற்குத் தேவையான உதவிகளை தேடிப் பெறுவீர்கள்.
வியாபாரிகள் விற்பனையில் ஏற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்
கைப்பொருட்கள் களவு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அரசாங்கக் காரியங்களில் இடையூறுகள் வந்து இம்சைப்படுவீர்கள்.
ஒருவர் உதவியால் அதைச் சமாளிப்பீர்கள்.
மிதுனம்
அழகாக பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.
கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்.
அப்படி கொடுத்தால் சாட்சி வைத்துக் கொள்ள தவறாதீர்கள்.
கடகம்
மனதில் நினைத்த காரியம் எளிதில் ஈடேறி மகிழ்ச்சி அடைவீர்கள்.
மங்கல நிகழ்ச்சியால் வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள்.
வயதான பெற்றோர்களிடம் வாயார வாழ்த்து பெறுவீர்கள்.
சிம்மம்
ஆடல் பாடல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக ஆசை கொள்வீர்கள்.
அனாவசியமான செலவுகளால் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாவீர்கள்.
ஆனால் உங்களின் விடாமுயற்சியால் வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள்.
கன்னி
வாக்குக் கொடுத்தால் காப்பாற்ற வேண்டும்.
இல்லையென்றால் தலைகுனிவு அடைவீர்கள்.
என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் சின்னச் சின்ன தொல்லைகளால் சிரமப்படுவீர்கள்.
துலாம்
எந்தக் காரியத்தை தொட்டாலும் தடையின்றி முன்னேறிச் செல்வீர்கள்.
பொருளாதாரத்தில் எதிர்பாராத ஏற்றம் பெறுவீர்கள்.
வாகனங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்
உங்கள் முயற்சிகள் முளைவிட்டு மரமாகி நல்ல கனிகளைக் கொடுக்கும்.
கையில் காசு பணம் தாராளமாகப் புரளும்.
ஓடி வந்து உதவி செய்யும் நண்பர்களை மறக்காதீர்கள்.
தனுசு
அனாவசிய செலவுகள் வந்து அவதிப்படுவீர்கள்.
இருப்பினும் அதனால் உங்களின் செல்வாக்கு உயர்வதை காண்பீர்கள்.
இந்த நாளில் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள்.
மகரம்
பூரண சந்திரனின் பலனை ஓரளவு பெறுவீர்கள்.
உடல்ரீதியான உபாதைகளை எதிர்நோக்குவீர்கள்.
மருத்துவச் செலவுகள் வரும்.
பெற்றோர்களால் மனச் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள்.
கும்பம்
மனைவி மனம் கோணாமல் நடந்து கொள்வதால் வேலையில் கவனம் செலுத்துவீர்கள்.
சிறிய விபத்தால் காயமடைவீர்கள்.
பணியாளர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.
மீனம்
வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள்.
வெளிநாட்டு நண்பர்கள் கேட்ட தொகையை அனுப்பி வைப்பார்கள்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமையை நீக்கி உறவை பலப்படுத்துவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)