தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் நீடிப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவியில் பதவி வகிப்பதனை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டதனை ரத்து செய்யுமாறு கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட வேறும் சிலரும் இது தொடர்பில் 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.