336
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது திருகோணமலையில் இருந்து வடகிழக்கில் சுமார் 321 கி.மீ.
நிலைகொண்டுள்ளது. இது டிசம்பர் 03, 2023க்குள் சூறாவளி புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மேற்கு வடமேற்கு நோக்கி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இந்தியாவின் வட தமிழ்நாடு கடற்கரையை நோக்கி டிசம்பர் 04, 2023 நகரும். அதன்பிறகு, அது ஒரு சூறாவளி புயலாக வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேச கடற்கரை டிசம்பர் 05, 2023 கடக்கும்.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
தீவின் ஏனைய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, வடக்கு- பகுதிகளில் அவ்வப்போது (40-50) kmph வரை பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.