Home » இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024

by namthesamnews
0 comment

குரோதி வருடம் ஆடி மாதம் 6 ஆம் தேதி திங்கட்கிழமை 22.07.2024 சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

எந்த வகையிலாவது தொழிலை முன்னேற்றமடைய செய்வீர்கள்.

வியாபாரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.

ரிஷபம்

தடைபட்டு நின்ற திருமண பேச்சு வார்த்தைகளை திறம்பட முடிப்பீர்கள்.

இல்லத்தரசியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

பிள்ளைகளின் படிப்புக்காக அரசியல் பிரமுகரின் உதவியை நாடுவீர்கள்.

மிதுனம்

எந்த செயலிலும் முந்தி நிற்காதீர்கள்.

தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆட்படுவீர்கள்.

கொடுத்த இடங்களில் பணவரவு தாமதமாவதால் தடுமாற்றம் அடைவீர்கள்.

கடகம்

சாதுரியமாக பேசி சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள்.

வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள்.

ஆன்லைன் வர்த்தகங்களில் நம்பி இறங்குவீர்கள்.

சிம்மம்

நீண்ட தூர பயணங்களின் போது வாகனங்களில் பழுது ஏற்பட்டு சரி செய்வீர்கள்.

உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளை தைரியத்தோடு சந்திப்பீர்கள்.

தொழிலுக்கு திடீரென்று தோன்றிய எதிர்ப்பை தரைமட்டமாக்குவீர்கள்.

கன்னி

பண பற்றாக்குறையால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவீர்கள்.

அலைச்சல் அதிகமானாலும் வெளியூர் பயணங்களால் அதிக பயன் அடைய மாட்டீர்கள்.

சாலையில் நிறுத்தும் வாகனத்தை பூட்டிவிட்டு செல்ல மறக்காதீர்கள்.

துலாம்

மரியாதைக்குரிய நபரின் நட்பு கிடைத்து சந்தோசப்படுவீர்கள்.

அவர் மூலமாக அரசாங்க வேலைகளில் அனுகூலம் அடைவீர்கள்.

வியாபாரத்தில் மிகுந்த லாபம் பார்ப்பீர்கள்.

விருச்சிகம்

முட்டுக்கட்டைகளை தாண்டி தொழிலை விரிவுப்படுத்துவீர்கள்.

சகோதர உறவுகளால் சச்சரவுகளில் மாட்டிக் கொள்வீர்கள்.

ஏற்கனவே இருந்த சொத்து பிரச்சனையில் இழுபறியான நிலை நீடிப்பதால் நீதிமன்றம் செல்வீர்கள்.

தனுசு

வாக்கு வன்மையால் குடும்ப சிக்கலை தீர்ப்பீர்கள்.

கூட்டுத் தொழிலுக்கான பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.

வெளிநாடு போவதற்கான ஏற்பாடு செய்வீர்கள்.

மகரம்

எவ்வளவுதான் சிக்கனமாக இருந்தாலும் செலவுகள் கை மீறி போவதால் கவலைப்படுவீர்கள்.

அடுத்தவருக்காக கடன்பட்டு அவஸ்தைப்படுவீர்கள்.

வியாபாரத்தில் சில இடையூறுகளை சந்திப்பீர்கள்.

கும்பம்

தேவையில்லாத அலைச்சல் வந்து சிரமப்படுவீர்கள்.

கையில் இருக்கும் காசு கரைந்து கடன் வாங்குவீர்கள்.

நிலம் வாங்கி விற்கும் தொழிலில் போட்டியால் பாதிக்கப்படுவீர்கள்.

மீனம்

நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

வேலை செய்யும் இடங்களில் முதலாளியின் பாராட்டை வெகுமதியாக பெறுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரித்து கையிருப்பு கூடுவதால் நகை வாங்குவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00