குரோதி வருடம் ஆடி மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை 25.07.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
உயரதிகாரிகளின் கோபத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள்.
குடும்ப பிரச்சனைகளால் மனநிம்மதி இழப்பீர்கள்.
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பெறுவீர்கள்.
ரிஷபம்
வீண் செலவுகள் குறைந்து நிதிநிலைமையை சீர்படுத்துவீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் சிறந்த முறையில் அக்கறை காட்டுவீர்கள்.
திருமணத்திற்கு நல்ல வரன் தேடுவீர்கள்.
மிதுனம்
மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உற்பத்தியை பெருக்குவீர்கள்.
சிறு வியாபாரிகள் அதிக லாபம் அடைவீர்கள்.
ரியல் எஸ்டேட் தொழிலை சீராக கொண்டு செல்வீர்கள்.
கடகம்
நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க தவறாதீர்கள்.
தேவையில்லாமல் கெட்ட பெயர்களை சம்பாதிக்காதீர்கள்.
கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்படுவீர்கள்.
சிம்மம்
வியாபாரத்தை விரிவுபடுத்த வீணாக செலவு செய்யாதீர்கள்.
வெளியூர் பயணங்கள் அவ்வளவு சாதகம் அடைய மாட்டீர்கள்.
கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாகி தடுமாற்றம் அடைவீர்கள்.
கன்னி
வருமானம் போதிய அளவுக்கு பெருகி மகிழ்ச்சியடைவீர்கள்.
குடும்ப நிர்வாகத்தில் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்வீர்கள்.
கணவன் மனைவி உறவை சிறப்பாக பேணுவீர்கள்.
துலாம்
பணி சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற ஊதியம் பெறுவீர்கள்.
வேலைக்காக கடல்தாண்டிப் போக ஏற்பாடு செய்வீர்கள்.
கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் பண வரவை காண்பீர்கள்.
விருச்சிகம்
அவசியமில்லாத செலவுகளால் அல்லல் படுவீர்கள்.
பணத்தின் மதிப்பை இந்த காலத்தில் நன்கு உணர்வீர்கள்.
ஏதாவது பிரச்சனை தோன்றி தொழிலுக்கு இடையூறை சந்திப்பீர்கள்.
தனுசு
புத்திசாலித்தனத்தால் வருமானத்தை உயர்த்துவீர்கள்.
எந்த பிரச்சனையானாலும் சொந்த முயற்சியால் தாண்டுவீர்கள்.
பூர்வீக சொத்துக்கள் பற்றி பேச்சுவார்த்தையை இப்போது நடத்தாதீர்கள்.
மகரம்
வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை தடையின்றிப் பெறுவீர்கள்.
அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள்.
அரசுத் துறை பணியாளர்கள் சிறப்பான பெயரை எடுப்பீர்கள்.
கும்பம்
வீட்டிலும் வெளியிலும் புகழும் செல்வாக்கும் அதிகரித்து உறவினர்களை பொறாமைப்பட வைப்பீர்கள்.
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
திருமணப் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.
மீனம்
தொழில் முன்னேற்றம் தொய்வான நிலையில் இருப்பதால் கவலைப்படுவீர்கள்.
குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறைவதால் நிம்மதி இழப்பீர்கள்.
கணவன் மனைவி உறவில் புரிந்துணர்வை நிலை நாட்டுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)