98
சனிக்கிழமையான இன்று மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு அகலும். வியாபாரத்தில் எதிர்பார்த்தது நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, எதிர்பாராத பயணங்களால் சோர்வு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் செலவுகள் வந்து சேரும். பிள்ளைகளிடத்தில் கோபத்தை காட்ட வேண்டாம்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, தொழில் மற்றும் குடும்ப சிக்கல்களில் பொறுமையுடன் முடிவுகள் எடுங்கள். மறைமுக எதிரிகளால் தடங்கல்கள் வரக்கூடும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். சிறு குறு வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வீட்டிலும் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் கவனமாய் இருக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுக்கள் தொடங்கும் நாள் இது.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தன்னம்பிக்கையுடன் செய்யும் காரியங்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்லும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, உறவினர்களால் சிக்கல்கள் வரக்கூடும். குடும்பத்தினருடன் அமைதியை கடைபிடிப்பது நல்லது. திடீர் செலவுகள் வரலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் வெற்றியை தரும் நாள். நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும் நாள் இது.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, கணவன் மனைவி இடையே சுமூகமான அன்பு பேணப்படும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பொருள், இன்பம் சேர்ந்து அமையும் நாள்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, பணியில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் அளந்து பேசுவது நல்லது. வியாபாரத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் அலைச்சல் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது மிகுந்த கவனம் தேவை. செலவுகள் வரலாம்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சூழல் சாதகமானதாக அமையும். உடன்பிறந்தவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.