129
கார்த்திகை மாதம் 21ம் நாள். 07 டிசம்பர், 2023. வியாழன் கிழமையான இன்று சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடன் பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உறவுகளால் ஆதாயம் கிட்டும். கடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் சாகமாக அமையும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, உறவுகள் வழியே செலவுகள் ஏற்படக் கூடும். குடும்பத்தினர் உடல் நலனில் அக்கறை வேண்டும். கணவன் மனைவியிடையே அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளிப்பர். தன்னம்பிக்கையுடன் வலம் வரும் நாள்.
கன்னி ராசி நேயர்களே, முக்கிய விடயங்களில் தீர ஆலோசித்து முடிவெடுங்கள். குடும்பத்தினரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். பொறுமை தேவைப்படும் நாள்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தினர் செலவை இழுத்து விடக்கூடும். ஆதலால் சிக்கனத்துடன் செலவு செய்வது நல்லது. வேலையிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கக் கூடும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவதால் கெடுதல் விளையாது. கடினமான உழைப்பை கோரும் நாள். பொறுமையும் கவனமும் தேவைப்படும் நாள்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத பணவரவு வரலாம். கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்:
மகர ராசி நேயர்களே, அனைத்தையும் பொறுமையுடன் அணுக வேண்டிய நாள். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே மனக்கசப்பு வரலாம். பேசும் வார்த்தைகளை கவனத்துடன் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். உடல்நலனில் அக்கறையுடன் இருக்க வேண்டும்.
மீன ராசி நேயர்களே, குடும்பத்தினரால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் சிக்கலை கொண்டு வரக்கூடும். வீண் சச்சரவுகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.