120
திங்கட்கிழமையான இன்று பகல் 2:26 வரை சித்திரை, அதன் பின்னர் சுவாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம். கடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிகவும் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, தொழிலில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்த நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, தொடங்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உண்டாகும் சிக்கல்களை உங்கள் புத்திக்கூர்மையால் முறியடிப்பீர்கள். குடும்பத்தினர் உடல் நலனில் அக்கறை வேண்டும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே அன்பும் ஆதரவும் செழிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் சாதகமான நாளாக அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நினைத்தது நடக்கும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, சிறு குறு வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெற்றோர்கள் வழி உறவினர்கள் வழியில் நல்ல காரியங்கள் கைகூடும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, பல சிக்கலான விடயங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சி செய்வீர்கள். சோர்வு நீங்க நண்பர்களுடன் பேசி மகிழ்வது நல்லது. எதிலும் இன்று கவனமும், பொறுமையும் அவசியம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, வேலையில் பதற்றம் அடையாமல் பொறுமையாக, அதே நேரத்தில் தீர்க்கமாகவும் இருக்க வேண்டும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே சிக்கல்கள் ஏற்படலாம். பேசும் வார்த்தைகளை கவனத்துடன் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். நண்பர்கள் வழியே உதவிகள் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, இன்று சுறுசுறுப்பான நாள். நீண்ட நாள் நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, எதிர்பாராத பணவரவு வரலாம். தொழில் சம்பந்தமான புது திறமைகளை வளர்த்துக் கொள்ள இன்று உகந்த நாள். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். சிரத்தை எடுத்து செயல்படும் காரணத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
2 comments
[…] ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]
[…] ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]