100
‘நாட்டில் (இலங்கையில்) நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு’ என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில், பாராளுமன்றத்தில் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் எக்காலத்திலும், எவருக்கு எதிராகவும் நான் முறைப்பாடு செய்ததில்லை.
இச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுடைய கைது மற்றும் விசாரணை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படக்கூடாது – என நான் கோரிக்கை விடுத்த நிலையில், குறித்த விசாரணைகள் இச் சட்டத்தின் கீழ் நடத்தப்படவில்லை.
அத்துடன், அவர்கள் பிணையில் செல்வதற்கு, நான் என்னுடைய சம்மதத்தை தெரிவித்த நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு ஆகும் – என்றார்.