133
கார்த்திகை மாதம் 14ம் நாள். 01 டிசம்பர், 2023. வெள்ளிக்கிழமையான இன்று கேட்டை மற்றும் மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அறிவுரை மற்றும் விமர்சனங்களை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேலையில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பணி சிறப்பாக அமையும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனமாக இருப்பது நல்லது.
கடக ராசி நேயர்களே, கடினமான வேலையை கோரும் நாள். இருப்பினும் அதற்கான பலன் கிடைக்கும். வீண் செலவுகள் ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்களிடம் சில சச்சரவுகள் வந்து போகும். பேசும் பேச்சில் கவனம் தேவை.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தினர் உடல் நலனில் அக்கறை வேண்டும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். சிறுகுறு வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புது பொருட்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, மனதில் இருக்கும் கவலை எதிலும் ஈடுபாட்டுடன் செயல்பட விடாமல் தடுக்கும். பயணங்களால் சோர்வு ஏற்படும். முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவதால் தீமை விளையாது.
தனுசு ராசி நேயர்களே, பிறருக்கு உதவி செய்வீர்கள். அதனால் மன அமைதி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்:
மகர ராசி நேயர்களே, எதிர்பாராத செலவுகள் வந்துசேரும். சகோதர உறவுகளிடம் சுமூகமான உறவு பேணப்படும். சிக்கனமாக செலவு வேண்டிய நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத பணவரவு வரலாம். நண்பர்களுடன் பேசி சிரித்து மகிழ்வீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.