114
சனிக்கிழமையான இன்று மதியம் வரை உத்திரம் அதன்பின் அஸ்தம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தீர ஆலோசித்து செய்ய வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, செலவுகள் ஏற்பட்டாலும் அது மகிழ்ச்சியை தரக்கூடிய விடயமாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கக் கூடும். யார் மனதையும் காயப்படுத்தாமல் பேசுவது நன்மை பயக்கும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, இன்று எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நேர்மறையான எண்ணங்களுடனும், செயல்களுடனும் அமையப்பெற்ற நாள் இது.
கடகம்:
கடக ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகள் அலைச்சலை கொடுக்கும். தொழில் வளரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, உறவுகளால் செலவுகள் வந்து சேரும். மனதில் சிற்சில குழப்பங்கள் வந்து போகும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து விடுங்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள். மாலை வேளையில் நண்பர்களுடன் பேசுவது ஆறுதலாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட போகும் நாள். தொழில் வளரும். முக்கிய முடிவுகளை எடுக்க போகும் நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். நண்பர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத பணவரவு கூட வரலாம்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதால் கெடுதல் விளையாது. சுறுசுறுப்பான நாளாக இது அமையும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, தேவையற்ற செலவுகள் வரக்கூடும். பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிரத்தை எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் மனைவியிடையே அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, உற்சாகமான நாளாக அமையும். தொடங்கும் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். கடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் கவனம் தேவை.
1 comment
[…] மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]