89
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்ட வீரரான வாசிம் பாகிஸ்தான் அணிக்காக 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் மொத்தம் 1472 ரன்கள் எடுத்ததுடன், 109 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய டி20 போட்டியே அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.
34 வயதாகும் வாசிம் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான் நீண்ட நாட்களாக இது குறித்து சிந்தித்து வருகிறேன். எனது ஓய்வை அறிவிக்க இதுவே சரியான தருணம்.
பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த பிபிசிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தியதில் நான் பெருமையடைகிறேன்.
வரவிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இது உற்சாகமான நேரம். மேலும் அணி சிறந்து விளங்குவதை காண ஆவலுடன் இருக்கிறேன்.
எப்போதும் ஆதரவாக இருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி. நான் வெற்றியும், வாழ்வில் உயரத்தை அடையவும் உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.
இனி என் விளையாட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்த நான் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பல மாற்றங்களை கண்டு வரும் இந்த வேளையில் இமாத் வாசிமின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1 comment
[…] கூறியது சர்ச்சையாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் ஜெசிந்தாவின் ஆட்சியில் […]