112
வெள்ளிக்கிழமையான இன்று மாலை வரை பூரம் மற்றும் அதன் பிறகு உத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, தொழிலில் புதிய முயற்சிகளை புகுத்தி வெற்றி காண்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் சோர்வை கொடுக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, நண்பர்களின் உதவி கிடைக்கும். உறவினர்கள் வாயிலாக நல்ல செய்திகள் வந்தடையும். பணிச்சுமை அதிகரிக்கக் கூடும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது நடக்கும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினர் உடல் நலனில் கவனம் வேண்டும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, உறவினர்கள் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பேசும் பேச்சில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, எடுத்த காரியத்தில் சில தடங்கல்கள் நேரக்கூடும். குடும்பத்தினர் வழியாக வரும் செய்திகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் முடிவுகளை பொறுமையுடன், பெரியவர்கள் ஆலோசனையுடன் எடுக்க வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, எதிர்பார்த்த பணவரவு வந்துசேரும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பணவரவு வரலாம்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, திடீர் செலவுகள் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, உறவுகளால் மனக்கசப்பு ஏற்படலாம். பெற்றோரின் உடல் நலனில் கவனம் தேவை. தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். இருப்பினும் தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொள்வீர்கள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்பும், ஆதரவும் செழிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.