113
கார்த்திகை மாதம் திங்கட்கிழமையான இன்று, இரவு 10 மணி வரை புனர்பூசம், அதற்கு பிறகு பூசம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் பெருக்கெடுக்கும் நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, பணவரவு வரலாம். உறவினர்கள் வாயிலாக அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, வீண் அலைச்சல் இருக்கும். இருப்பினும் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, தொழிலில் சில தடங்கல்கள் நேரக்கூடும். நண்பர்கள் உதவி செய்வர். குடுப்பத்தினருடன் சில பிணக்குகள் உருவாகலாம்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, வீண் அலைச்சல் உடல் சோர்வை கொண்டு வரும். உறவினர்களிடம் அமைதியாக இருப்பது நல்லது. வேலையில் அதிக பொறுமையும் கவனமும் தேவை.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். நண்பர்களுக்கு உதவுங்கள். எடுத்த காரியங்கள் கைகூடும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, பண வரவு இருந்தாலும் திடீர் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகள் மற்றும் கடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிகவும் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே அன்பும் ஆதரவும் செழிக்கும். குடும்பத்தினர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும் நாள். தொழிலில் ஏற்றமும்,லாபமும் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களில் கவனம் தேவை. வரவும் செலவும் ஒருசேர அமையும் நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நலம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பொறுமை அவசியம்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்வது நல்லது. சிறுசிறு குழப்பங்கள் ஏற்படலாம். இருப்பினும் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
1 comment
[…] ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]