114
கார்த்திகை மாதம் 14ம் நாள். 30 நவம்பர், 2023. வியாழக்கிழமையான இன்று மாலை வரை அனுஷம் அதன் பின்னர் கேட்டை ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, தன்னம்பிக்கையுடன் வலம் வரும் நாள் இது. தொழிலில் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட விடயங்கள் சாதகமாக அமையும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, எல்லோரிடமும் அன்பாக பேசுங்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பயணங்கள் இனிமையாகும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, அனாவசிய செலவுகள் வரலாம். சிக்கனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். வியாபாரத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, முன் திட்டமிடுதலுடன் செய்யக் கூடிய காரியங்கள் பலனை அளிக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனையை அலையவிட வேண்டாம்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, வீட்டிற்கு புதிய பொருட்களை வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். குடும்பத்தினர் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் வலம் வரும் நாள்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, பல நாள் சிக்கலை உங்கள் புத்திக்கூர்மையால் முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் வளரும் நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, உணர்ச்சிவசப்படுவதால் இழப்புகளை சந்திக்க நேரிடும். பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். கடினமான உழைப்பை கோரும் நாள்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதம் வரலாம். இருப்பினும் அவையாவும் மறைந்து போகும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, எதிர்பாராத பணவரவு வரலாம். நீண்ட நாட்களாக நினைத்தது நடக்கும். சிறு குறு வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்திலும், சமூகத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வளரும். நினைத்ததை முடிக்கும் நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாளாக அமையும்.