96
கிளிநொச்சி மகாதேவா இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் ஏழு சிறுமிகளுக்கான பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுகள் கடந்த 9ம் திகதி மிகவும் சிறப்பாக சமய சம்பிரதாய கலாச்சார விழுமியங்களுக்கேற்ப சுப நேரத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இல்லத்தின் நலன்விரும்பிகள், நன்கொடையாளர்கள், திணைக்களங்களுடைய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் இல்லத்தினுடைய குழந்தைகள் பணியாளர்கள், பணிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் குழந்தைகளுக்கு வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தினையும் வழங்கி மகிழ்ந்திருந்தனர்.