93
கார்த்திகை மாதம் 29ம் நாள். 15 டிசம்பர், 2023. வெள்ளிக்கிழமையான இன்று காலை 10:39 வரை ரோகிணி அதன் பின்னர் மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, சுறுசுறுப்பான நாளாக இது அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதால் கெடுதல் விளையாது.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கனிவாக பழகுங்கள். சுற்றத்தாரிடம் வீண் விவாதங்களை தவிருங்கள்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, எதிர்பார்த்த பணவரவு கைக்கு வந்து சேரும். வீண் செலவுகளும் ஏற்படலாம். சிக்கனத்துடன் செலவு செய்வது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடுவதால் நன்மையே வந்து சேரும்.
கடக ராசி நேயர்களே, எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, எடுத்த காரியங்கள் வெற்றியாகும் நாள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிட்டும். உங்களுக்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சிகளை சுக்குநூறாக்குவீர்கள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தவிருங்கள். எடுத்த காரியங்கள் சிறிது இழுபறி ஆகலாம். வாகனத்தில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, உடன்பிறந்தவர்களால் ஆதாயம் வரலாம். எதிர்பாராத பணவரவு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் வலம் வருவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பம் சம்பந்தமாக முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. பேசும் வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்துங்கள். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, புதிய வாய்ப்புகள் தேடிவரும். கணவன் மனைவியிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் செலவை இழுத்து விடக்கூடும். வியாபாரத்தில் ஏற்படும் சிறிய சிக்கல்களை முறியடித்து வெற்றி காணும் நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களிடத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சாதகமான நாளாக அமையும்.
மீன ராசி நேயர்களே, அரசாங்க காரியங்கள் இழுபறியில் இருந்தவை எல்லாம் இன்று சுமூகமாக முடியும். குடும்பத்தினர் கேட்பதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.