63
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 ரன்கள் வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில், இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி, Grenada-வின் தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
முதலாவதாக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் பிரண்டன் கிங் (Brandon King) அதிரடியாக 52 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும்.
அதேபோல் சரவெடியாய் வெடித்த ரோவ்மன் பௌல் (Rovman Powell) 28 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரஷித் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 மட்டுமே எடுக்க முடிந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளும் அகேல் ஹூசேன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இது அந்த அணிக்கு இரண்டாவது தோல்வியாகும்.
மேலும், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரண்டன் கிங் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை நடக்கவுள்ளது.