இன்று உத்திரட்டாதி ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வது அவசியம்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, உயரதிகாரிகளின் இடையூறால் உங்களுக்கு மனவேதனை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டாது. குடும்பத்தில் இணக்கமான சூழல் உருவாக முயற்சிப்பீர்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தும் நாள் இன்று. போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் குதூக்கலமான சூழலை உருவாக்குவீர்.
மிதுன ராசி நேயர்களே, வேலையில் இருப்பவர்களுக்கு உற்சாகமான நாள் இன்று. எதிர்பாராத பணவரவால் கடன்கள் அடைக்கப்படும். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துவீர்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படும். வயிற்றுப்போக்கால் அவதியுறுவீர். குடும்பத்தில் கோபத்தை காட்டாதீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, பணியிடத்தில் கவனமாக வேலை செய்யுங்கள். சிக்கலை ஏற்படுத்தும் வேலைகளை வீம்புக்காக செய்ய வேண்டாம். வெளியூர் பயணங்களை ஒத்திப்போடும் நிலை உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு உண்டாகும். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர். பழைய கடன்களை அடைக்க பாடுபடுவீர். ஊக்கமான முயற்சியால் வியாபாரத்தில் இருந்த தேக்கங்கங்களை விலக்குவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே, பணிச்சுமையால் இன்று நீங்கள் பாதிக்கப்படும் நாள். தொழிலுக்காக நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாண காரியங்களால் வீடு களைகட்டும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, வீடுகட்ட மனை இடம் வாங்குவீர்கள். பணப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வீர்கள். விறுவிறுப்பாக வியாபாரம் செய்து லாபம் பெறுவீர்கள்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, புதிய திட்டங்களால் தொழிலை விரிவுபடுத்த விரும்புவீர்கள். கேட்ட இடத்தில் பணம் தாராளமாக கிடைக்கும். பொறாமையால் வந்த எதிர்ப்புகளை துடைத்து ஏறிவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, உயர் அதிகாரிகள் கொடுக்கும் உற்சாகத்தால் கடுமையான வேலைகளையும் செய்வீர்கள். அண்டை வீட்டாரிடம் இருந்த கருத்து வேறுபாட்டை விலக்குவீர். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சி கிட்டும்.
மீன ராசி நேயர்களே, வாகனங்கள் பழுதாகி செலவு செய்யும் நிலை ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் செல்வாக்கு அடைவீர்கள்.