Home » மீண்டும் வெஸ்ட் இண்டீசை சூறையாடிய பிலிப் சால்ட்! 57 பந்தில் 119 ரன் விளாசல்..

மீண்டும் வெஸ்ட் இண்டீசை சூறையாடிய பிலிப் சால்ட்! 57 பந்தில் 119 ரன் விளாசல்..

by Vaishnavi S
0 comment

ட்ரினிடாட்டில் நடந்த 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து 75 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட் கடந்த போட்டியை போலவே பேட்டிங்கில் சரவெடியாக வெடித்தனர்.

இவர்களின் பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் குவித்தது.

பட்லர் 55 (29) ரன்களில் அவுட் ஆகஇ வில் ஜேக் தனது பங்குக்கு 24 (9) ரன்கள் விளாசி வெளியேறினார்.

இதற்கிடையில் சால்ட் அதிரடி சதம் விளாசினார். அவர் 57 பந்துகளில் 10 சிக்ஸர்இ 7 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து ரசல் ஓவரில் ஆட்டமிழந்தார்.

லிவிங்ஸ்டன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 54 குவிக்கஇ இங்கிலாந்து அணி 267 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 15 பந்துகளில் 39 ரன்களும்இ ரூதர்போர்டு 15 பந்துகளில் 36 ரன்களும் விளாசி வெளியேறினர்.

அதன் பின்னர் ஆந்த்ரே ரசல் வெற்றிக்காக போராடினார். ஆனால் அவருக்கு துணையாக யாரும் நின்று ஆடாததால், வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களிலேயே 192 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த ரசல் 25 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.

இங்கிலாந்து தரப்பில் டாப்லே 3 விக்கெட்டுகளும், ரெஹான் அகமது மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் தோல்வியுற்றதால் தொடர் 2-2 என சமனில் உள்ளது. இறுதிப்போட்டி இதே மைதானத்தில் 22ஆம் திகதி நடைபெற உள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00