112
மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ (Alexandro Garnacho) அடித்த பைசைக்கிள் கிக் கோல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் Goodison park மைதானத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) அணி எவர்டன் (Everton) அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் முதல் மூன்றாவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை சேர்ந்த அலெஜான்ட்ரோ கர்னாச்சோ பைசைக்கிள் கிக் எனும் முறையில் சிறப்பான கோல் அடித்தார்.
ஆட்டத்தின் பாதி நேர முடிவில் மான்செஸ்டர் அணி 1-0 என்று முன்னிலையில் இருந்தது.
அதன் பின்னர் இரண்டாம் பாதியை தொடர்ந்த இரு அணிகளும் கோல்கள் அடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன.
மான்செஸ்டர் அணிக்காக, ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் Marcus Rashford பெனால்டி முறையில் ஒரு கோலும், 75வது நிமிடத்தில் Anthony Martial ஒரு கோலும் அடித்தனர்.
ஆட்டத்தின் முடிவில் எட்வர்டன் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.
இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்திற்கு பிறகு அலெஜான்ட்ரோ கர்னாச்சோ பைசைக்கிள் கிக் முறையில் அடித்த கோல் பற்றி கூறுகையில் “நேர்மையா சொன்னால் அந்த கோலை எப்படி அடித்தேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அது நான் அடித்த மிகச்சிறந்த கோல்களில் ஒன்று. நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.