80
கார்த்திகை மாதம் 28ம் நாள். 14 டிசம்பர், 2023. வியாழன் கிழமையான இன்று காலை 11:42 வரை கிருத்திகை, அதன் பின்னர் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். உற்சாகமான நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதால் கெடுதல் விளையாது. குடும்பத்தினர் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, துணிவாக சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்ளக்கூடிய நாள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, குடும்பத்திற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்ம ராசி நேயர்களே, எதிர்பாராத செலவுகள் வரலாம். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். எதையும் பொறுமையுடன் அணுக வேண்டிய நாள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, உறவினர்கள் செலவை இழுத்து விடக்கூடும். சிக்கனத்துடன் செலவு செய்வது நல்லது. நீண்ட பயணங்கள் சோர்வை தரக்கூடும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பேசும் பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உறவினர்கள் வாயிலாக நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் லாபம் வந்து சேரும். இன்று உற்சாகமான நாளாக அமையும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, எதிர்பாராத வகையில் பணவரவும், செலவுகளும் உண்டாகும். வாழ்க்கைத் துணை உறுதியுடன் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் சக போட்டியாளர்களின் தொல்லை நீங்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, எடுத்த காரியங்கள் சிறப்பாக முடியும். கணவன் மனைவியிடையே நெருக்கம் கூடும். பெற்றோர்களிடத்தில் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
மீன ராசி நேயர்களே, உடன் பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். தொழிலில் பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.