103
பார்படாஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான
5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது.
பார்படாஸின் கென்சிங்டன் ஓவல் (Kensington Oval) மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது.
மிரட்டலாக பந்துவீசிய ரசல் மற்றும் ஜோசப் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அந்த அணி சார்பில் சால்ட் 40 (20) மற்றும் ஜோஸ் பட்லர் 39 (31) ரன்களும் எடுத்தனர்.
அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கியது.
18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக களமிறங்கிய ஆன்ட்ரே ரசல் (Andre Russell) 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் அவர் பேட்டிங்கில் 14 பந்துகளில் 29 ரன்கள் விளாசி அணியை வெற்றிபெற வைத்தார்.
இதன்மூலம் அவர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி 14ஆம் திகதி நடைபெற உள்ளது.