123
கார்த்திகை மாதம் 18ம் நாள். 04 டிசம்பர், 2023. திங்கட்கிழமையான இன்று உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீங்கள் உங்களை நம்புவதே சிறந்தது. தன்னம்பிக்கையுடன் வலம் வரும் நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். உறவினர்கள் தேடி வருவர். புது நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்தடையும். சமூகம் சார்ந்த செயல்களில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் நாள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, தொழிலில் ஏற்பட்ட தடங்கல்களை சுக்குநூறாக்குவீர்கள். நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். அனைவரிடமும் கனிவுடன் பேசிப் பழக வேண்டிய நாள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே சச்சரவுகள் வந்து போகும். யாரிடமும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். தொழிலில் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத வகையில் புது நண்பர்கள் கிடைப்பார்கள். சிறுகுறு வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும் நாள்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பெரிய பொறுப்புகள் உங்களை தேடி வந்தடையும். பணியிடத்தில் மதிப்பு கூடும்.
மகர ராசி நேயர்களே, முக்கியமான விடயங்களில் மிகவும் கவனம் தேவை. பணி காரணமாக அலைச்சல்கள் இருக்கலாம். பழைய நினைவுகளில் மூழ்கி இருப்பதை தவிருங்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே அன்பும் ஆதரவும் செழிக்கும். வேலையிடத்தில் சாதகமான சூழல் அமையும். தன்னம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்த நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, சிக்கலான விடயங்களை உங்கள் புத்திக்கூர்மையால் எளிமையாக முடிப்பீர்கள். பயணங்களில் ஆதாயம் கிட்டும். உங்கள் வார்த்தைகளுக்கு மரியாதை கூடும்.