105
அனஸ்டாசியா லெபடேவா (Anastasiia Lebedeva) என்கிற டிக்டாக் தினமும் பாஸ்தா சாப்பிடுவதன் மூலம் ‘ஒரு மாதத்தில்’ 10 பவுண்டுகள் உடல் எடையை குறைத்தாக வெளிப்படுத்தியுள்ளார்.
22 வயதான அனஸ்டாசியா 273,000க்கும் அதிகமான TikTok பின்தொடர்பவர்களுடன் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பற்றி வெளிப்படுத்தி, அதிகமான லைக்ஸ்களை பெற்று மக்களிடையே செல்வாக்கு உடையவராக திகழ்ந்து வருகிறார்.
இவர் தனக்கு உள்ள உணவு உண்ணும் பிரச்சினையை மக்களிடையே வெளிப்படையாக பேசும் நபர் ஆவார்.
சமீபத்தில், NYC-ஐ அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கத்தை உருவாக்கியவர் அனஸ்டாசியா.
மேலும் ‘பாஸ்தா, பீட்சா, குக்கீகள் மற்றும் ஐஸ்கிரீம்‘ சாப்பிடும் போது உடல் எடையை விதம் பவுண்டுகள் குறைக்கலாம் என்று அதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்தார்.
ஒரு வைரல் வீடியோவால், இதுவரை 138,000 க்கும் அதிகமான பார்வைகளைக் குவிந்துள்ளது, அந்த வீடியோவில் அவர் உடல் எடையை குறைக்கும் முன் மற்றும் பின் உள்ள தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
பிறகு அவரது அனுபவத்தை பகிர்ந்தார் “உடலுக்கு கார்போஹைட்ரேட் மோசமானவை என்று கருதியதால், தனக்கு பிடித்த ஐஸ்கிரீம், பாஸ்தா, குக்கீஸ் மற்றும் பீட்ஸா போன்ற அனைத்தையும் தவிர்த்தேன் “என்றார்.
பின் அதனால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து, தன் மூளையை தினமும் பாஸ்தா சாப்பிட்டாலும் உடல் எடை குறையும் என்று நம்பவைத்து, அதையே நடைமுறையாக மாற்றி உடல் எடையை குறைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த உணவுக்கு ஏற்ற உடற்பயிற்சி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.