Home » இன்று யாருக்கு சந்திராஷ்டமம்? இராசிபலன்கள் இதோ…

இன்று யாருக்கு சந்திராஷ்டமம்? இராசிபலன்கள் இதோ…

by namthesamnews
0 comment
இன்று சந்திர பகவான் விருச்சிக ராசியில் விசாகம், அனுஷம் ஆகிய நட்சத்திரங்களில் பயணிக்க உள்ளார்.
மேலும், மேஷ ராசியினருக்கு இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமுடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, இன்று சமூகத்தின் நலனுக்கான காரியங்களை முன்னெடுப்பீர்கள்‌. கடுமையான உழைப்பை கோரும் நாள் இது. மேலும் குடும்பத்தினரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கும் நாள்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு அகலும். வியாபாரத்தில் இடர்பாடுகள் வந்தாலும் அதை திறம்பட தகர்த்து வேலையை முடிப்பீர்கள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத பணவரவு வரலாம்‌. ஆதலால் நிதானமாக செயல்பட வேண்டும். இந்நாள் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்கள் வெற்றிக்கான நாள் ஆகும். எதிரிகள் உருவாக்கும் தடைகளை சுக்குநூறாக்குவீர்கள். செல்வமும், மகிழ்ச்சியும் ஒருசேர கிடைக்கப்பெறும் நாள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு கடினமான உழைப்பை கோரும் நாள். நேரம் வீணடிக்கப்படாமல் கவனத்துடன் வேலையை செய்வது அவசியம். குடும்பத்தில் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, உங்கள் தொழிலில் புதிய சிந்தனைகளை புகுத்தும் நாள் இது. அது லாபகரமானதாக அமையும். பெற்றோரின் ஆசிர்வாதமும், கணவன் அல்லது மனைவியின் ஆதரவும் தன்னம்பிக்கையை உயர்த்தும் நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, இன்று பேச்சில் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். குடும்பத்திலுல், தொழிலிலும் அவசரப்பட்டு வார்த்தை விடுதல் கூடாது. இன்று சந்திக்க நேரிடும் நபரால் ஆதாயம் கிட்டும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எதையும் நிதானமாக அணுக வேண்டிய நாள்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் சில நற்செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் கண்மூடித்தனமான நம்பிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் .
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, பூர்வீக சொத்துக்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்படலாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டிய நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, நண்பர்களுடன் பேசி,பகடி செய்து கலகலப்பாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00