121
கார்த்திகை மாதம் 13ம் நாள். 29 நவம்பர், 2023. புதன்கிழமையான இன்று பகல் 3:21 வரை விசாகம் அதன் பிறகு அனுஷம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் சாதகமாக முடிவுகள் அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். தொழிலில் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்களால் நல்ல செய்திகள் வரும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, தொழில் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். பேசும் வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்துங்கள். கண்மூடித்தனமான நம்பிக்கை கூடாது.
கடக ராசி நேயர்களே, வியாபாரத்தில் போட்டிகள் ஏற்படலாம். கணவன் மனைவியிடையே சில சச்சரவுகள் வந்து நீங்கும். வேலையில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். குடும்பத்திலும் சமூகத்திலும் மரியாதை அதிகரிக்கும். சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, மேற்கொள்ளும் பயணம் சுகமாக அமையும். மாற்றங்களை செய்வதன் மூலம் தொழிலில் அடுத்த கட்டம் நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பொறுமை அவசியம். கடினமான உழைப்பை கோரும் நாள். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டிய நாள்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, உறவினர்களால் ஆதாயம் உண்டு. புது பொருட்கள் வாங்குவீர்கள். திறமையின் மூலம் வெற்றி வந்து சேரும் நாள்.
மகர ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல் தீரும். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அனைவரிடத்திலும் கனிவாக நடந்துகொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை புகுத்தி வெற்றி காணும் நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, சிறிய செலவுகள் வரக்கூடும். முன்தயாரிப்புகளுடன் தொடங்கிய வேலைகள் சாதகமான முடிவை தரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
1 comment
[…] நல்ல செய்தி தாமதம் ஆகலாம். சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, […]