92
ஐப்பசி மாதம் 24ஆம் திகதியான இன்று கும்ப ராசியில் அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
தற்போது இன்றைய ராசிபலன்கள் குறித்து காண்போம்.
மேஷ ராசி நேயர்களே, உங்கள் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும் நாள் இன்று. உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக செலவுகள் ஏற்படக்கூடும்.
ரிஷ ராசி நேயர்களே, உங்கள் உடல்நலத்தை பேணிப் பாதுகாப்பது அவசியம். பணம், உங்களது நட்பில் விரிசலை ஏற்படுத்தலாம், ஆகையால் கவனமுடன் செயல்படுவது நல்லது.
மிதுன ராசி நேயர்களே, நீங்கள் தேவையற்ற செலவுகளை இன்று தவிர்க்க வேண்டும். வெற்றிக்கான முயற்சியில் தடைகள் குறுக்கிடும். எனவே கலக்கமடையாமல் முன்னோக்கி செல்ல வேண்டிய நாள் இன்று.
கடக ராசி நேயர்களே, சமூகத்தில் எடுக்கக்கூடிய முன்னெடுப்பு உங்களுடைய மரியாதையை உயர்த்தும். மேலும் பூர்வீக சொத்துக்கள் மூலம் இன்று ஆதாயம் கிடைக்கும்.
சிம்ம ராசி நேயர்களே, இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சக ஊழியர்களுடன் கனிவாக பழகுங்கள். சட்டரீதியான சிக்கல்கள் விலகும் நாள் இன்று.
கன்னி ராசி நேயர்களே, தொழிலில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். ஆசைப்பட்டது நடக்கும் நாள். கடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை தவிர்ப்பது நல்லது.
துலாம் ராசி நேயர்களே, சக ஊழியர்களிடம் கவனமாக இருங்கள். குடும்பத்தின் ஆலோசனைகள் மூலம் பிரச்சினைகளை நீங்கள் முடிப்பீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் நாள் இன்று. உங்கள் தொழிலில் இன்று நினைத்தது நடக்கும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகலாம். அலட்சியமாக இருந்தால் கெடுதல் வந்து சேரும். செய்யும் செலவுகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.
மகர ராசி நேயர்களே, குடும்பத்தினால் உங்களுக்கு இன்று அலைச்சல் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு சில வாய்ப்புகள் வரக்கூடும். செலவு செய்வதில் கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு சகோதர,சகோதரிகளால் இன்று மகிழ்ச்சி உண்டாகும். தொழில் லாபம் தரும் நாள். வணிகத்தில் சிந்தனையுடன் செயல்படுவது நல்லது.
மீன ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் இன்று நீங்கும். லாபம் தரும் நாள். நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும்.