113
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையில் நேற்று முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் பெருங்களத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் செல்போன் பேசியபடி சென்றபோது உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிகண்டன் என்ற இளைஞர் பெருங்களத்தூர் ஏரிக்கரை அருகே சாலையில் குடைபிடித்தபடி சென்றுள்ளார்.
செல்போன் பேசியபடி சென்ற அவர், சாலையில் இருந்த மின்சார பெட்டியில் இருந்து சென்ற கம்பியை மிதித்துள்ளார்.
இதில் அவர் அங்கேயே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது செல்போன் லேசாக கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதே போல் தி.நகர் பகுதியில் அசாமை சேர்ந்த அப்பு ஹனிபு என்கிற இளைஞர், மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பொலிஸார் இருவரின் மரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.