Home » சூர்யகுமார் தலைமையில் களமிறங்கும் இந்தியப்படை! மூன்று வித தொடர்களுக்கு அணிகள் அறிவிப்பு

சூர்யகுமார் தலைமையில் களமிறங்கும் இந்தியப்படை! மூன்று வித தொடர்களுக்கு அணிகள் அறிவிப்பு

by namthesamnews
0 comment
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் 10ஆம் திகதி முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் என நீண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இதற்கான மூன்று வித அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவும், ஒருநாள் தொடருக்கு கே.எல்.ராகுலும், டெஸ்ட் தொடருக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தங்குகின்றனர்.
வேகப்பந்து பந்துவீச்சாளர் முகமது ஷமி மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், அவரது உடற்தகுதியைப் பொறுத்து அணியில் இணைவார் என்று கூறப்படுகிறது.
முதலாவதாக டி20 தொடர் 10ஆம் திகதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 17ஆம் திகதி ஒருநாள் தொடரும், 26ஆம் திகதி டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.
டி20 அணி விபரம்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்
ஒருநாள் அணி விபரம்:
சாய் சுதர்சன், ரஜத் பட்டிடார், கே.எல்.ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்தரா சாஹல், அக்சார் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், தீபக் சாஹர்
டெஸ்ட் அணி விபரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஜடேஜா, முகேஷ் குமார், முகமது ஷமி

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00