Home » இன்று பொறுமை தேவைப்படும் ராசிக்காரர்கள்!

இன்று பொறுமை தேவைப்படும் ராசிக்காரர்கள்!

by namthesamnews
0 comment
கார்த்திகை மாதம் 22ம் நாள். 08 டிசம்பர், 2023. வெள்ளிக்கிழமையான இன்று காலை 8:24 வரை சத்யம் அதன் பின்னர் பூரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவியிடையே அன்பும் பாசமும் பெருகும். தொழிலில் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தினரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதம் வந்துபோகும். அவசரப்பட்டு வார்த்தைகளை விடாமல் கவனமுடன் பேசுவது நன்மை பயக்கும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வேலையிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கக் கூடும். கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சிக்கனத்துடன் செலவு செய்வது நல்லது. உறவினர்கள் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.
சிம்ம ராசி நேயர்களே, எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி நிலைபெறும். தொழிலில் லாபம் வந்துசேரும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, எதிர்பார்த்த பணவரவு வருவதில் தாமதம் ஆகலாம். வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார்கள். எதிர்ப்புகளை மீறி வெற்றி பெறும் நாள்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தினர் உடல் நலனில் அக்கறை வேண்டும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதால் கெடுதல் விளையாது. உறவினர்கள் உதவச் சொல்லி கேட்பார்கள். வீண் செலவுகள் ஏற்படலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். பழைய பிரச்சினைகளை சுமூகமாக பேசி முடிப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். பிள்ளைகள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து அன்பும், ஆதரவும் கிடைக்கும். சிறுகுறு வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும் நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, எதன் மீதும் பற்று இல்லாத மனநிலையில் சிக்கிக் கொண்டு தவிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பொறுமையுடனும், கனிவுடனும் வேண்டிய நாள்
மீனம்:
மீன ராசி நேயர்களே, யாரிடமும் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள் வழியே சில சிறிய செலவுகள் வரலாம். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00