114
இன்று சந்திர பகவான் தனுசு ராசியில் கேட்டை மற்றும் மூலம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று ரிஷப ராசியினருக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமுடன் இருக்கவும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, இன்றைய நாள் சாந்தமான ஒரு நாளாக அமையும். உடல் ஆரோக்கியத்துக்கு குறைவு இருக்காது. இன்று சந்திர பகவான் நடமாட்டம் இருப்பதால் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, உறுதியுடனும், உற்சாகத்துடனும் இருப்பீர்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இது.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, தொழில் தொடர்பான புது முடிவுகளை எடுப்பீர்கள். வாகனங்கள் வாங்க அல்லது விற்க உகந்த நாளாக அமையும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, சந்திர பகவான் பார்வையால் நன்மைகள் விளையும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தள்ளிப்போன வேலைகள் கைகூடி இன்று சுபமாக முடியும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். மனப்போராட்டங்கள் அகலும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, காதல் கைகூடும் வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி பிணக்கு முறிந்து அன்பு பேணப்படும் நாள். பல நாட்களாக எண்ணத்தில் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள் இது.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மகிழ்ச்சியான நாளாக இது அமையும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, தொழிலில் லாபமும், வெற்றியும் கிடைக்கும். மேலும் பல உயர்வுகளை பெறப்போகும் நாள்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, தொழிலில் லாபமும் வளர்ச்சியும் வந்து சேரும். தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் பெருகும் நாளாக இது அமையும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, சிறு குறு வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் சாதகமாக அமையும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, மனப்போராட்டங்கள் வரலாம். அதனை கடந்து வரும் நாள். கடன் விசயத்தில் கறாராக இருக்க வேண்டிய நாள்.