வரும் 25ஆம் திகதி சுக்கிரன் துலாம் ராசியில் இருந்து விலகி விருச்சிக ராசிக்குள் நுழைய உள்ளார்.
குறிப்பாக, சுக்கிரனின் ராசி மாற்றம் புத்தாண்டிற்கு முன் நிகழ்வதால் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சிறப்பாக இருக்கப் போகிறது.
சுக்கிரனின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் சுக்கிரன் 7வது வீட்டிற்கு செல்வதனால் இந்த ராசிக்காரர் நிதி நன்மைகளை அதிகளவில் பெறுவார்.
அலுவலகலத்தில் பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், தங்கள் முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் பெறுவர்.
அத்துடன் திருமண வாழ்வில் உள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியால் நல்ல வரன் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதுடன், தங்கள் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள்.
கடக ராசி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோருடனான உறவு சிறப்பாக இருப்பதுடன், புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும்.
இந்த பெயர்ச்சி காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். அதேபோல் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 4வது வீட்டிற்கு செல்வதால் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறைவதுடன், பணியிடத்தில் உடன் வேலை செய்பவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல பண ஆதாயம் அடைவார்கள். மேலும் புதிய வீடு, வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
அத்துடன் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இந்த காலத்தில் புதிய தொழிலை தொடங்கினால் சாதகமாக அமையும்.