115
இன்று அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, மனைவியின் சொத்தில் பாதி பங்கு இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலர் நினைத்த காரியத்தை முடிக்க கடன் வாங்குவீர்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, வயிற்றுக் கோளாறுக்காக மருத்துவ சிகிச்சை செய்வீர்கள். கால நேரம் பார்க்காமல் உழைத்து பாராட்டை பெறுவீர்கள். உறவினர்கள் இடையே மரியாதை குறைவதை உணர்வீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு வருமானத்திற்கு இடையூராக இருந்த தடைகள் நீங்கும். பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனையை பேசி தீர்ப்பீர்கள்.
கடக ராசி நேயர்களே, நீண்டநாள் நண்பர் உதவியால் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கடன் சுமையை குறைப்பீர்கள். ஒன்லைன் வர்த்தகங்களில் ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று நீங்கள் தவறான நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, பழைய நண்பர்களின் உதவியை நீங்கள் நாடுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பீர்கள்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, தொழிலை விரிவுப்படுத்த இன்று நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். முதுகு வலியால் சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் உடல் சோர்வும், மனச்சோர்வும் அடைவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, வீடு கட்டும் வேலையில் சுணக்கம் காண்பீர். தேவை இல்லாத வாக்குறுதிகளை யாருக்கும் வழங்காதீர்கள். பணம் முடக்கத்தால் பாதிப்பு ஏற்படும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பணம் கொட்டும் நாள். வியாபாரத்தில் பல மடங்கு லாபம் கிட்டும். வாகன விற்பனையில் முன்னேற்றம் காண்பீர். காதலில் வெற்றி பெறுவீர்கள்.
மகர ராசி நேயர்களே, மகிழ்ச்சிக்காக ஆடம்பர செலவு செய்வீர்கள். உறவுகளை பலப்படுத்த முயற்சி எடுப்பீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பிள்ளைகளால் சோதனையை சந்திக்கும் நாள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள வேண்டாம்.
மீனம்:
மீனா ராசி நேயர்களே இன்று அதிக அலைச்சல் உங்களுக்கு இருக்கும் என்பதால் உடல் சோர்வு அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் பயன் இருக்காது. நிதானம் தேவைப்படும் நாள்.