72
தென் கொரியாவில் ரோபோ ஒன்று பெட்டி என நினைத்து உடன் பணிபுரிந்த நபரை இயந்திரத்திற்குள் திணித்த தால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரோபோடிக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 40 வயது நபர், காய்கறி பெட்டியை சீல் செய்யும் பணிக்கு ரோபோக்களை பயன்படுத்தி வந்துள்ளார்.
பெட்டிக்கும், மனிதருக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிய ரோபோ அவரை சீல் வைக்கும் இயந்திரத்திற்குள் திணித்துள்ளது.
குறித்த நபர் ரோபோவின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் இயந்திரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.