85
கனடாவில் உள்ள 2 யூத பள்ளிகளில் ஒரே இரவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரானது பல்வேறு நாடுகளில் யூதர்கள் மீது பலதரப்பட்ட மக்களின் வெறுப்புணர்வை தூண்டியுள்ளது.
அதன் ஒரு படியாக மான்ட்ரீலில் உள்ள 2 யூத பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
இது குறித்து தனது X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மான்ட்ரீலில் உள்ள யூதப் பள்ளிகளில் ஒரே இரவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்திகள் திகிலூட்டுகின்றன. இந்த வன்முறைச் செயல்களை நான் மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறேன் – மேலும் நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன். இந்த வெறுப்புணர்வுக்கு கனடாவில் இடமில்லை, நாம் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.