112
வெள்ளைச் சர்க்கரையை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய காரணிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
மேலும் இது, சொத்தைப் பல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற சிறிதும் பெரிதுமான பல நோய்களுக்கு காரணமாகவும் அமைகிறது.
குறைந்த அளவு சர்க்கரையை நுகர்வோரை காட்டிலும் உணவில் அதிகளவு சர்க்கரையை சேர்த்துக்கொள்பவர்கள் அதிகமான இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் உயிர் இழப்புகளும் அதிகமாகிறது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை வெள்ளைச் சர்க்கரையில் இருந்தாலும் வெள்ளை நிறத்திற்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது.
இதனாலேயே நாட்டுச் சர்க்கரை மேலானதாக ஆகிறது.
மேலும் வெள்ளைச் சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் குறைவு.
பொட்டாசியம் நிறைந்த நாட்டுச் சர்க்கரை பெண்களின் மாதவிடாய் வலிகளை குறைக்கிறது.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவது, அஜீரணம் ஆகியவற்றிற்கும் நாட்டுச் சர்க்கரை நல்ல நிவாரணியாக செயல்படுகிறது.
ஒப்பீட்டளவில் நாட்டுச் சர்க்கரை நல்லது என்றாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு அது பொருந்தாது. அவர்கள் இவ்விரண்டையும் தவிர்ப்பதே நல்லது.
1 comment
[…] நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியே நமது உடலின் ஆரோக்கியத்தை காக்கும் […]