145
அமீர் குறித்து குற்றச்சாட்டுகளை பேசி வரும் ஞானவேல்ராஜாவை கண்டித்து இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் “அவர் (அமீர்) படம் எடுக்க கற்றுக்கொண்டது என் காசில்தான், பொய்க் கணக்கு காட்டினார்” என்று குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி, இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் மற்றும் ஓவியர் பொன்வண்ணன் ஆகியோர் ஞானவேலுடைய குற்றச்சாட்டை மறுக்கும் வகையில், அமீருக்கு ஆதரவாக களம் இறங்கினர்.
பாதி படம் நடைபெறும்போது, அமீர் தான் கடன் வாங்கி படப்பிடிப்பை நடத்தினார். தவறாக பேசாதீர்கள், உண்மையை பேசுங்கள் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், இயக்குநர் மற்றும் நடிகர் கரு.பழனியப்பன் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது?
அமீரை திருடன், பொய் கணக்கு எழுதுபவர் என்று சொல்கிறாரே, ஆறு ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட சங்கத்தில் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராகவும், தயாரிப்பாளர்-தொழிலாளர் இடையே சுமூகம் ஏற்பட உருவாக்கப்பட்ட ஊதியக்குழுவின் தலைமையிலும் பணியாற்றிய அமீரை பக்கத்தில் இருந்து பார்த்த நான் சொல்கிறேன்.
இத்தனை ஆண்டுகளில் ஒருவேளை உணவு கூட இந்த சங்கங்களின் பணத்தில் அமீர் உண்டதில்லை.
அன்று உடனிருந்த நானும், ஜனநாதனுமே சாட்சி. பருத்திவீரன் தயாரிப்பில் நூறு முரண்பாடுகள் இருக்கலாம்.
ஆனால் பொதுவெளியில் ஒரு இயக்குனரை திருடன் என்றும், ஒன்றும் தெரியாதவன் என்றும், என் காசில் தொழில் பழகியவன் என்றும் Character assassination செய்வது அயோக்கியத்தனம்.
இப்படி பேச தைரியம் எங்கிருந்து வந்தது என்று கேட்டிருந்தார் சமுத்திரக்கனி. இந்த கேள்வி எழும்போதே பின்னணியில் சிவகுமாரும் அவரது பிள்ளைகளும் இருப்பார்களோ என்ற சந்தேகத்தின் நிழல் விழுவதை தவிர்க்க முடியவில்லை.
“அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற வள்ளுவர் வாக்கு பொய்க்காது என்று அறிந்த சிவக்குமார், ஞானவேலை பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும்.
திரு.சிவக்குமார் சொல்வார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
1 comment
[…] நடிகர்கள் சமுத்திரகனி, சசிகுமார், கரு.பழனியப்பன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர், பொய் […]