139
இயக்குநர் அமீருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கண்டித்து பேசியுள்ளார் நடிகர் சமுத்திரக்கனி.
பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீரை குற்றம்சாட்டி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியது.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதுகுறித்து ஊடகத்திடம் விளக்கம் அளிக்க முடியவில்லை என அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஆனாலும் ஞானவேல் தனது தரப்பில் தான் நியாயம் இருப்பதாக கூறி வந்ததார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் சசிகுமார் “பருத்திவீரன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் நான் தான் கொடுத்தேன்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகர் சமுத்திரக்கனியும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாகவும், ஞானவேல் ராஜாவை கண்டித்தும் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ‘ரொம்ப தப்பு பண்ணிட்டு இருக்கீங்க. ஆறு மாசம் பருத்திவீரன் படப்பிடிப்பில் இருந்திருக்கேன். ஆனா உங்களை ஒருநாள் கூட பார்த்தது இல்ல.
உங்களை தயாரிப்பாளராகவும், கார்த்திய ஹீரோவாகவும் ஆக்கினாரு அமீர்.
எந்த நன்றியும், விஸ்வாசமும் இல்லாம பேசிருக்கிங்க. எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம். அமீர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காருனு எனக்கு தான் தெரியும்.
கால்வாசி படம் நடக்கும்போதே நீங்க கைய விரிசீங்க. 50, 60 பேரு சேர்ந்து தான் படத்த எடுத்து முடிச்சோம்.
ஆனா கடைசியாக நீங்க வந்து தயாரிப்பாளர் சட்டைய போட்டுகிட்டிங்க.
களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறத என்னால ஏத்துக்க முடியல.
இந்த மாதிரி பொதுவெளியில் தப்பு தப்பா பேசுறத இத்தோட நிறுத்திக்கோங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது’ என தெரிவித்துள்ளார்.
1 comment
[…] வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த […]