Home » தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

by namthesamnews
0 comment

பிரபல நடிகர் தனுஷ் நடித்து வெளியான படத்திற்கு தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனுஷ் படத்திற்கு எடுத்த முதல் சர்வேதச அங்கீகாரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமா வரை இவர் பேமஸ், தமிழ், இந்தி, படங்களில் நடித்த தனுஷ் சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

இவரது பல படங்கள் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தவை. அப்படி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்கு தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

லண்டனில் நடந்த தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கேப்டன் மில்லர் படத்தை சிறந்த வெளிநாட்டுக்கு படத்துக்கான பிரிவில் தேர்வு செய்து விருது வழங்கியுள்ளனர். கேப்டன் மில்லர் படத்துக்கு கிடைத்த முதல் சர்வ்தேச அங்கீகாரம் என்பதால் படக்குழுவினர் அனைவரும் குதூகலத்தில் உள்ளனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00