127
நியூசிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற கிறிஸ்டோபர் லக்சன், புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குவதாக கூறியது சர்ச்சையாகியுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் ஜெசிந்தாவின் ஆட்சியில் சிகரெட் பிடித்தலுக்கு கட்டுப்பாடு, புகையிலை பொருட்களுக்கு தடை என போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற கிறிஸ்டோபர் லக்ஷன் (Christopher Luxon), புகையிலை தொடர்பிலான தடைகள் நீக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு கருத்துகளை எதிர்கொண்டு வருகிறார்.
கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த பொதுத்தேர்தலில் தேசிய கட்சி வெற்றிதைத் தொடர்ந்து அதன் தலைவரான கிறிஸ்டோபர் லக்ஷன் நாட்டின் புதிய பிரதமராக தெரிவானார்.
அதன் பின்னர் பதவியேற்பு விழாவில் அவர் பேசும்போது “நியூசிலாந்தில் அமையவிருக்கும் கன்சர்வேடிவ் அரசாங்கம் புகையிலை தொடர்பான கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும்” என்று கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் புகைபிடித்தல் எதிர்ப்பு அமைப்பினர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக புகைபிடித்தல் எதிர்ப்புக் குழுவான Health Coalition Aotearoa வெளியிட்ட அறிக்கையில்,
‘இது பொது சுகாதாரத்திற்கு ஒரு பெரிய இழப்பு மற்றும் புகையிலை தொழிலுக்கு ஒரு பெரிய வெற்றியாகும், அதன் லாபம் கிவியின் (நியூசிலாந்து மக்கள்) வாழ்க்கை இழப்பில் உயர்த்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் லக்ஷன் சிகரெட் தடையானது கறுப்புச் சந்தை தோன்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.