183
மாவீரர் நாளில் யூடியூப்பில் பேசியது துவாரகாவாக இருக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி இலங்கை தமிழர்களால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாவீரர் நாளில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா எனக் கூறி பெண்ணொருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில் அப்பெண் தன்னை துவாரகா என அறிமுகம் செய்துகொண்டதுடன், தமிழீழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் சில விடயங்களை பேசினார்.
அதன் பின்னர் வீடியோவில் பேசிய பெண் தலைவரின் மகள் அல்ல என்று பலர் கூறி வருகின்றனர்.
எனினும் சிலருக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் குறித்த பெண் தலைவரின் மகள் இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.
கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறுகையில்,
‘தலைவரின் மகள் துவாரகா இன்று இணைய ஊடகத்தில் தோற்றமளித்தார் என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
அதை தமிழ்நாட்டில் இருந்து சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து யாரும் சொல்லவில்லை.
புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகள் அதை சொல்லவில்லை. இயக்கத்தைச் சார்ந்த முன்னணி தளபதிகள் யாரும் அதை சொல்லவில்லை.
இப்படி ஒரு நிலை இன்றைக்கு ஈழத்தமிழ் சொந்தங்கள் இடையே இருப்பது என்பது தான் வேதனைக்குரியது’ என தெரிவித்துள்ளார்.
1 comment
[…] ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு கொழும்பு […]